நேர்காணலில் எப்படிப் பேசுவது?
பெரும்பாலான மாணவர்கள் மற்றும் job switch பண்ண நினைப்பவர்களுக்கு நேர்காணல் என்பது ஒரு வித பயத்தையே ஏற்படுத்தும். என்ன கேள்விகள் கேட்கப்படுமோ எப்படிப் பதில் சொல்வது என்ற ஒருவித மன நெருக்கடி ஏற்படும்.
நேர்காணலை(interview) மிகவும் சுலபமாக எதிர்கொள்ளலாம். அதற்கு சில நாட்கள் home work செய்ய வேண்டும்.
நான் சொல்லும் விசயங்கள் கணிப்பொறித் துறையில் technical மற்றும் personal(HR) interview ஆகியவற்றினை சுலபமாக எதிர்கொள்ள உதவும்.
முதலில் உங்களுக்கும் கேள்விகள் கேட்பவர்களுக்கும் ஒரு ஒத்த அலைவரிசையை( same frequency) ஏற்படுத்த வேண்டும். அதை நேர்காணல் ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடங்களில் ஏற்ப்படுத்த வேண்டும்.
அதை என் அனுபத்தில் நான் சொல்லும் வழிகளிலும் செய்யலாம்.
நேர்காணலில் கேள்விகளுக்கு மிக நேரடியாகப் பதில் சொல்லாதீர்கள். உதாரணம்: கேள்வி : உங்களுக்கு ஜாவா வில் வேலை செய்யத் தெரியுமா? பதில் 1 :தெரியும்/தெரியாது (இது நேரடியான பதில்)
ஆனால் இதே போல நேரடியாகப் பதில் சொல்வதால் உங்களுக்கும் கேள்வி கேட்பவருக்கும் ஒரு ஒத்த அலை வரிசையை ஏற்படுத்த முடியாது. அடுத்த கேள்விக்குப் போய்விடுவார் ஒருவித திருப்தி இல்லாமல்.
பதில் 2: ஜாவா என்பது தற்போது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப் பட்டுவரும் ஒரு தொழில்நுட்பம். அதை நான் கற்றுக் கொண்டு வருகிறேன். இன்னும் ஒரு சில மாதங்களில் என்னால் திறமையாக ஜாவாவில் வேலை செய்ய முடியும்.
பதில் 2 ன் மூலம் சில விசயங்கள் கேள்வி கேட்பவருக்கு சொல்லப் படுகிறது. அதாவது நீங்கள் ஜாவா படித்து வருகிறீர்கள். நீங்கள் புதிதாக தொழில் நுட்பங்களைப் படிபவர். இது தான் இங்கு முக்கியம்.
நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, என்ன கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்து வைத்துக் கொண்டால், உண்மையான நேர்காணலில் கேள்வி கேட்டவுடனேயே(quick response) பதில் சொல்ல முடியும். இதைத்தான் நான் home work என்று சொன்னேன்.
இரண்டாவதாக நான் சொல்வது கேள்வி கேட்பவரை உங்கள் வழிக்கு இழுத்து வருவது. இதுவும் சாத்தியமா?. சாத்தியம் தான். நான் கலந்து கொண்ட 9 நேர்காணல்களில் 6 நேர்காணல்களில் அப்படிச் செய்ய முடிந்தது. ஒரு கேள்விக்கான பதிலிலேயே அடுத்த கேள்விக்கான clue இருக்க வேண்டும். கேள்வி கேட்பவர் பெரும்பாலும் பதிலில் அதைக் கவனித்து விடுவார். அவர் கொஞ்சம் கவனம் இல்லாதவராக இருந்தால் அந்தக் கேள்வியையே கேட்பார்.
உதாரணம் :- கேள்வி : (Explain how JDBC works)JDBC எப்படி வேலை செய்கிறது அல்லது ஜாவாவில் எப்படி JDBC யை உபயோகிப்பது.
பதில்கள் : உங்கள் பதில்களில் DriverManager, Statement,PreparedStatement,ResultSet பற்றியெல்லாம் சொல்லிவிட்டு. நான்கு வகையான driverகள் உள்ளன என்பதையும் சொல்ல மறக்காதீர்கள்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் அடுத்த கேள்வியானது பெரும்பாலும் நான்கு வகையான driverகள் பற்றியே இருக்கும். அதற்குப் பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் விரித்த வலையில் நீங்களே விழுந்து விடுவீர்கள்.
இவைகள் எல்லாம் ஒரு சில sample தான். இவற்றை உபயோகித்து 2004ம் ஆண்டில் 9நிறுவனங்களின் நேர்காணலை சந்தித்து 7ல் தேர்ச்சி பெற்றேன்.இது போல வேறு சில வழிமுறைகள் பலருக்கும் தெரிந்திருக்கும். அவர்களுன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும்.
மேலே சொன்ன வழிமுறைகள் எல்லாம் தொழில்நுட்ப விசயங்கள் தெரிந்து, நேர்காணலை அனுகும்முறையில் தடுமாறுபவர்களுக்குத்தான் செல்லுபடியாகும்.
கல்லூரி மாணவர்களுக்கு: உங்களுக்கு அதிகமாக technical கேள்விகள் அதிகம் கேட்கப் படமாட்டாது. அதனால் சிரமம் அதிகம் இல்லை. அனால் போட்டி அதிகம் இருக்கும். அதனால் தகுதிச் சுற்றிலேயே அனைவரையும் முந்திச் செல்வது முக்கியம். நேர்காணலில் மற்றவர்களிடம் இருந்து உங்களைத் தனித்துக் காட்ட ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்வது அவசியம். நல்ல பயனுள்ள ஒரு ப்ராஜெக்ட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அனைவருக்கும் body language மிகவும் முக்கியமானது. கீழ்கண்ட தளங்களில் சென்று பாருங்கள்.
http://www.deltabravo.net/custody/body.php http://www.bodylanguagetraining.com/examples.html http://www.bodylanguagetraining.com/phrases.html http://www.bodylanguagetraining.com/blatwork.html http://www.bodylanguagetraining.com/presentations.html

14 Comments:
Useful Blog!!
" same frequency!! "
Good concept!! I have also done this!!
// உங்கள் வழிக்கு இழுத்து வருவத //
May not be hold good when we are facing the Top Guy in any industry.
My opinion is, do not try to act smart. This will backfire.
But, it is good blog. Keep up your good work.
Hey,
Great tips, thanks, especially how to be at an interview. Thanks.
-Kajan
One of my interviews went like this:
Interviewer : Good Morning. How are you doing today?
Me : Hi.
I/v : So, Can you brief about yourself.
Me : I guess everything I can say is on my resume.
I/v : Oka..y, Do you know any C++?
Me : All I know is C.
I/v : But I dont know C too well. Besides, what is there to ask in C?
Me : I guess that is your problem. I have been short listed for C and that is all I ever want to know. I am not even interested in learning C++. So you have to ask me in C. Ask me anything in C and I shall answer.
I/v : Oka..y, can you tell me the difference between C and C++?
Me : (after a chuckle) I guess I made clear that I dont know C++. Do you think I can answer that?
I/v : Okay. Guess I dont have any quesions for you. You can leave now. We will get back to you shortly.
In around a week, I got the offer letter.
My latest interview :
I/v : Hi, how are you doing today?
me : Well, not so good, I guess. No sleep for the last couple of nights and to make it worse, I ran out of coffee yesternight.
I/v : Is it some project for your current company.
me : Nope. I dont have no job right now. My contract with the previous company ended two weeks back and that's why I am here. Actually, I was trying to create a tiny OS that would have only what I need. But the damn thing crashes every time I try to load a specific reentrant function. Man, I am working my brains out, but still struck on this stupid thing. Guess I need a break.
I/v : Interesting.. Do you know anything about our company?
me : Oh yeah. I googled even before applying to you guys. In fact the details I got about this company are quite impressive. That's the main reason I applied for this company. I enjoy working with this sort of company and though I do have a couple of offers from xyz, zyx companies, I will appreciate if you guys selected me and will join here.
I/v : Guess I dont have much to ask. Your resume is stunning. Do you have any questions?
me : Yes. If I join here, what would be my office hours?
I/v : We are flexible with that. You can choose any time that suits you.
me : Gee. Thanks. Thats what I expect.
I got the offer immediately.
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி.
Nerd,அனானி நீங்கள் கலந்து கொண்ட நேர்முகத்தேர்வு இந்தியாவிலா, அல்லது வெளிநாட்டிலா?
நான் போன எந்தக் கம்பெனியிலும் 3 மணி நேரத்திற்குக் குறைந்து என்னை வெளியில் விடவில்லை. CTS,WIPRO,IFLEX,ORACLE,Yardlee போன்றவற்றில் கலந்து கொண்டு ஆபர் கிடைத்தது. கடைசியில் நான் கலந்து கொண்ட நிறுவனத்திலும் 2 நாட்களில் 4 தேர்வுகளை நடத்தினார்கள். ஜாவா developers அதிகமாக உள்ளதால் இப்படி filter செய்கிறார்களோ?
I dont want to say the name of the company, but they are one of the leaders in india.
சில மாதங்களுக்கு முன்னால் நான் நேர்காணல் ஒன்றுக்கு சென்றிருந்தேன், நேர்காணுபவராக. ஒரு கால் செண்டருக்கு பிரெஞ்சு பேசுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அப்போது நான் விண்ணப்பதாரர்களிடம் என்ன எதிர்பார்த்தேன் என்பதை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_05.html
அதிலிருந்து ஒரு பகுதி:
"விண்ணப்பதாரர்களுக்கு சில வார்த்தைகள்:
1. எல்லா சான்றிதழ்களும் ஒரிஜினலாக, அவற்றின் பல நகல்கள், பயோடேட்டா சில நகல்கள், தேவையான எழுதும் காகிதங்கள் எல்லாம் கிரமப்படி கையில் உள்ள ஃபோல்டரில் இருக்க வேண்டும். நன்றாக எழுதக்கூடிய பேனா ரொம்ப முக்கியம். (முக்கியமாக நான் இண்டர்வியூ செய்தவர்களை முதலில் அவர்கள் பயோடேட்டாவை கேட்டு என்னிடம் வைத்து கொண்டேன். அதன் பின்னாலேயே அவர்கள் பிரெஞ்சு பேசும் முறையை ஆராய்ந்து என் எண்ணங்களை உடனுக்குடன் குறித்து வைத்தேன். பிறகு கம்பெனி என்னிடம் கொடுத்த மதிப்பிடும் தாளை பூர்த்தி செய்து நான் குறிப்புகள் நிரப்பியிருந்ததையும் கம்பெனிக்காரர்களிடம் கொடுத்தேன். எல்லா விண்ணப்பதாரர்களும் நான் கேட்டதை பூர்த்தி செய்தனர் என்பதையும் இங்கு கூறி விடுகிறேன்..)
2. மனதில் நம்பிக்கையுடன் நேர்காணுபவரை அணுக வேண்டும். அவரும் உங்களைப் போன்ற மனிதர்தான். அவரைக் கண்டு டென்ஷன் ஆக வேண்டாம்.
3. கேட்ட கேள்வி என்ன என்பதை கவனமாகக் கேட்டு, அதன் பொருளை உள்வாங்கி, பிறகு நிதானமாக நிறுத்தி விடை அளித்தல் ஒரு நல்ல எண்ணத்தை உங்கள் மேல் ஏற்படுத்தும்.
4. கண்ணியமான உடை அணிய வேண்டும். ஜிங்குச்சா ஜிங்குச்சா என்றெல்லாம் உடை அணிவது நல்லதல்ல."
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டிய பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_05.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் எக்ஸ்.
'மட்டுறுத்தல் நண்பன்' என்ற ஒரு செயலியை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன். இதைப்பற்றிய என் இடுகை தமிழ்மணத்தில் அரைமணி நேரம் மட்டுமே தோன்றியதால் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இதை உபயோகித்து மட்டுறுத்தலுக்கு தேவையான ஆலோசனைகள் அல்லது தன்னியக்க மட்டுறுத்தல் ஆகிய சேவைகளை பெறலாம். மேற்படி விவரங்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லவும். நன்றி.
-வெங்கட்ரமணி (அ) அந்நியன்
அருமையான பதிவு.
நன்றி வெங்கட்ரமணி
என்ன ஆச்சு? ஏப்ரலில் இருந்து மூடி வச்சிட்டீங்க?!!
மீண்டும் வரும் பொன்ஸ். ஒரு சிறிய இடைவெளி. மீண்டும் தன்னம்பிக்கை வரும். பதிவுகளைப் பற்றிய உங்களின் கருத்துகளைச் சொன்னால் என்னை மேம்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
உங்களின் தன்னம்பிக்கையான செய்கைகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?
நன்றி.
X,
இந்த ரெண்டாவது பதிலில் தன்வழிக்கு இழுத்துவரும் கான்சப்ட் குறைவு என்று தோன்றுகிறது..
//பதில் 2: ஜாவா என்பது தற்போது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப் பட்டுவரும் ஒரு தொழில்நுட்பம். அதை நான் கற்றுக் கொண்டு வருகிறேன். இன்னும் ஒரு சில மாதங்களில் என்னால் திறமையாக ஜாவாவில் வேலை செய்ய முடியும்.//
இந்த மாதிரி பேசிய சிலரை நான் அவுட்ரைட்டாக ரிஜக்ட் செய்திருக்கிறேன்.. ஏதோ நீட்டி முழக்கி "ஒன்றும் தெரியாது" என்று சொல்பவர்கள், சொன்ன வேலையைச் செய்யாமல் இருப்பதற்கும் இப்படித் தான் வழவழா காரணம் கண்டு பிடிப்பார்கள் என்பது கான்சப்ட்
//கேள்வி : உங்களுக்கு ஜாவா வில் வேலை செய்யத் தெரியுமா?//
இந்தக் கேள்விக்கு நான் சொல்லக் கூடிய பதில்களைச் சொல்கிறேன்:
பதில் 1: தெரியும், கடந்த --வருடங்களாக ஜாவாவில் வேலை செய்கிறேன். எனவே ஓரளவுக்கு நன்றாகவே தெரியும். JDBC, Swings வரை தெரியும்.
பதில் 2: C-யில் வேலை செய்திருக்கிறேன். ஜாவா அத்தனை நன்றாகத் தெரியாது. இப்போது தான் கற்று வருகிறேன்.
இதில் நீங்கள் சொல்லும் அடுத்த கேள்வியை நாமே முடிவு செய்யும் கான்சப்டும் வந்து விடுகிறது.. உண்மையைச் சுற்றி வளைக்காமல் சொல்லும் போது அதுவே நமக்காக பேசும் என்பது என் அனுபவம்..
//ஏதோ நீட்டி முழக்கி "ஒன்றும் தெரியாது" என்று சொல்பவர்கள், சொன்ன வேலையைச் செய்யாமல் இருப்பதற்கும் இப்படித் தான் வழவழா காரணம் கண்டு பிடிப்பார்கள் என்பது கான்சப்ட்//
இந்த ஒரு கேள்வியை மட்டும் வைத்தே ஒருவரை தேர்வு செய்வது என்பது முடியாதது. ஒருவரிடைய atttidude எப்படி என்பதையும் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்பது என் கருத்து.
அப்புறம், நீங்க இண்டர்வியூ செய்யும் போது தெரியப்படுத்துங்கள். நானும் கலந்து கொள்கிறேன். செலக்ட் செய்வீர்கள் தானே? ;))
Post a Comment
<< Home